நூலின் தலைப்பே, நம்மைப் படிக்கத் தூண்டுகிறது எனலாம். நாடறிந்த வழக்கறிஞர் நூலின் ஆசிரியர். சிறந்த பேச்சாளரான நூலாசிரியர், ஏற்கனவே பல சுயசிந்தனை நூல்களை எழுதியுள்ளார். இந்நூலும், நம் சிந்தனையைத் தூண்டி, நல்லறிவு பெறவைக்கிறது. 50 தலைப்புகளில், நூலாசிரியர் தம் எண்ணச்சிறகுகளை விரித்துள்ளார். அத்தனையும் படிப்போர்க்கு, இனிக்கும் என்றே கூறலாம்.
திருக்குறள், கம்பராமாயணம், திரிகடுகம், பழமொழி நானூறு என, பல நூல்களிலிருந்து, மேற்கோள்கள் காட்டி, நூலாசிரியர் விளக்குவது, அவரின் விரிந்த அறிவாற்றலுக்கு எடுத்து காட்டுகளாகும். சில கட்டுரைகளில், உண்மை நிகழ்வுகள் எழுதப்பட்டுள்ளன. படிப்போர்க்கு, ஆர்வத்தை ஊட்டும் சில கட்டுரைகளில் தென்படும் நகைச்சுவைகள், வாசகர்களைச் சிந்திக்க வைக்கும்.
டாக்டர் கலியன்சம்பத்து