அனேகமாய் எல்லா அறிஞர்களும், மனித மனம் ஒரு குரங்கு என்பதை ஒப்புக் கொண்டிருக்கின்றனர். நொடிக்கு, நொடி, கிளைக்கு கிளை தாவும் குரங்கை போல், அலைபாயும் மனதை, ஒரு முகப்படுத்தி, தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது என்பது, எளிதான காரியமல்ல; எனினும் முயன்று அரும்பாடுபட்டு வென்றவர்களும் உண்டு.
இந்நூலாசிரியர் ஐந்து தலைப்புகளில், மனதை வெல்லும் வழிமுறைகளை மிக எளிய ஆங்கிலத்தில் விவரித்திருக்கிறார். பெரும்பாலும், கேள்வி – பதில் வழியில், எழுதப்பட்டிருப்பது நூலுக்கு சுவை கூட்டுகிறது. தொழில் முறையிலும் சரி, தனிப்பட்ட வாழ்வுக்கும் சரி பெரிதும் பயன்படக் கூடிய நூல்.