தலித்துகளுக்கு மற்ற இந்துக்கள் இழைக்கும், கொடுமைகளை விவரிக்கிறது இந்த நூல். வேலைக்கு கூலி தராமல் ஏமாற்றும் கொடுமை, பள்ளியில் தாகம் ஏற்பட்டால், குழாயின் அருகில் காத்திருக்கும் கொடுமை, விருந்துகளின் போது, வெளியே போடப்படும் எச்சில் உணவுக்காக காத்துக் கிடக்கும் அவல நிலை என்று, இளமையில் தான் பட்ட வேதனைகளையும், பின் கஷ்டப்பட்டு படித்து முன்னேறிய போதும், தன் ஜாதிப் பெயரால், தனக்கு ஏற்பட்ட வேதனைகளையும் படிப்பவர் மனம் குமுறும் வண்ணம் விவரித்துள்ளார் ஆசிரியர்.
மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகளை வணங்கும் இந்துக்கள், தலித்துக்களிடம் மட்டும் ஏன் இவ்வளவு வெறுப்போடு நடந்து கொள்கின்றனர்? என்று வினா எழுப்புகிறார். சிந்திக்க வைக்கிறது அவரது கருத்துக்கள்.
சிவா