தாயுமானவர் பாடிய பாடல்கள் அவர் பெயராலே தாயுமானவர் பாடல்கள்’ என, வழங்குவதை போலவே, வேதாத்திரி மகரிஷியின் பாடல்கள் உரைகள் எல்லாம், வேதாத்திரியம் என்று அவர் பெயராேலயே வழங்கப்படுகின்றன. இருவருமே, ‘குரு அருள் தேவை’ என்று கூறினர். எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல், வேறொன்றறியேன் பராபரமே என்றார் தாயுமானவர். ‘வாழ்க வையகம், வாழ்க வளமுடன்’ என்ற தாரக மந்திரத்தை தந்தவர் மகரிஷி.
உடலோம்பல் இறை வழிபாடு செய்வதாகும் என்பது, மகரிஷியின் அழுத்தமான கொள்கையாகும். இதனால் தான், ஊனுக்குள் இறைவன் நின்று உலவி வருவதாக, முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். நம்முடைய மனமே, நாம் பெற்றுள்ள ஒரு அரும்பெரும் பொக்கிஷமாகும். அதை நாம் எப்படி பயிற்றுவிக்கிறோமோ, அப்படியெல்லாமல் அது விரிந்தும், சுருங்கியும் சிறப்போடும் செயல்படும். இது தான் இந்த மனதின் விசித்திரமாகும். எனவே தான் இதை விசித்திர உலகம் என்கிறோம்...’ என்கிறார் மகரிஷி தாயுமானவரையும், வேதாத்திரி மகரிஷியையும் ஒப்பு நோக்கும் அருமையான ஆய்வு நூல்.
எஸ்.குரு