தமிழகத்தில் கொத்தடிமைகள் என்று நூலுக்குத் தலைப்பு அமைந்திருப்பினும், உலக அளவில் பல நாடுகளிலும் உள்ள கொத்தடிமைகள் பற்றி விரிவாக இதில் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில் பல லட்சம் மக்கள் கொத்தடிமைகளாக உள்ளனர் என்று ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர்.
செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், கல்குவாரிகள் முதலிய இடங்களில் கொத்தடிமைகளைக் காணமுடிகிறது.
கொத்தடிமைகள் இல்லாமல் இருக்க, சட்டங்கள் இயற்றப்பட்டும், அடிமை வாழ்க்கை தொடர்கதையாகவே உள்ளது. 1997 முதல் இன்று வரை ‘அச்சமூட்டும் கடன்’ காரணமாக ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டனர் என்ற புள்ளிவிவரமும், அடிமைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும் படிப்போரை கலங்கச் செய்கின்றன. நாட்டில் அவல நிலை நீங்க, கல்வியில் வளர்ச்சி ஏற்பட வேண்டும். செய்தித் தொகுப்பாக அமைந்த ஆய்வு நூல்.
ம.நா.ச.கிருஷ்ணன்