பாரத தேசத்திற்கு புத்துயிர் தந்தவர் சுவாமி விவேகானந்தர். அவர் பிறந்த 150வது ஆண்டு கொண்டாட்டத்தின் நினைவாக ராமகிருஷ்ண மடம் இந்த சிந்தனை அமுத நூலை அழகுடன் வழங்கியுள்ளது. சுவாமிஜியின் சீடர்களின் வாழ்வில் நிகழ்ந்த 100 சம்பவங்கள், படிப்பவரின் மனதை ஆட்கொள்கின்றன.
சுவையா சில செய்திகள்: ‘உலக நாடுகளைப் பற்றிய தீர்க்க தரிசனம்: ‘இன்னும் ௫௦ ஆண்டுகளில் இந்தியா சுதந்திரம் பெறும். சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியா மேலை நாடுகளின் புராதன பாரம்பரிய பெருமையை இந்தப் புதிய பாரதம் கெடுத்துவிடும். அதே வேளையில் அமெரிக்கா முதலிய நாடுகள் படிப்படியாக ஆன்மிகமயமாகும் (பக்:17)
இறந்த குழந்தையைத் தன் தவத்தின் மூலம் சுவாமிஜி ‘சக்தி சஞ்சாரம்’ செய்து பிழைக்க வைத்த சம்பவம் படிப்பவர் நெஞ்சில் புதிய மின்னலையை உருவாக்கும்.
மா.கி.ரமணன்