ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான சீத்தலைச் சாத்தனார் எழுதிய மணிமேகலை நூலுக்கு விரிவுரை – பதவுரை – பொழிப்புரை – உரைச்சுருக்கம் என்று, பல நூல்கள் வெளிவந்திருந்தாலும், சாமி. சிதம்பரனாரால் இந்நூல் சற்றே வித்தியாசமானதாக எழுதப்பட்டிருக்கிறது. மணிமேகலையின் மாண்பு என்ற தலைப்பில் துவங்கி, சிந்திக்க வேண்டியவை என, 23 தலைப்போடு நூல் நிறைவடைகிறது.
‘பசிக்கொடுமை’ (பக்.54), ‘பிற மத வெறுப்பு’ (பக்.87), ‘ஊழ்வினையும் பிறப்பும்’ (பக்.93), ‘இலக்கியச் சுவை’ (பக்.152) என, வாழ்வியல் நெறிகளை மணிமேகலை காப்பியத்துடன் ஒப்பிட்டு, ஒரு திறனாய்வு நூல் போன்று சாமி. சிதம்பரனார் தந்துள்ளார்.
குமரய்யா