இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், வீர வணக்கம் செய்து போற்றி நினைவில் வைத்து பாராட்டப்பட வேண்டியவர்களில், விநாயக தாமோதர சாவர்க்கரும் ஒருவர். இவருக்கு நிகராக ஒரு போராளியை ஒப்பிடவே முடியாத அளவிற்கு, இந்தியத் திருநாட்டின் சுதந்திர வேள்வியில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட தலைமகனது வாழ்வியல் சுருக்கம்தான் இந்நூல். 50 ஆண்டுகால சிறை வாழ்க்கை, ஆங்கிலேயரின் அராஜக கொடுங்கோலாட்சியில் அந்தமான் தனிச் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தமானில் செக்கிழுத்தார்.
இந்துத்துவா, இந்து பதபாதஷாஹி, உஷஷாப், உத்தர்க்தியா, சன்யங்தகடக் போன்ற தலைசிறந்த இலக்கிய நூல்களை எழுதியவர். அவரின் படைப்புகளில் எரிமலை அல்லது முதலாவது இந்திய சுதந்திர யுத்தம், பாரத நாட்டின் வரலாற்றில், ஆறு பொன் ஏடுகள் என்ற நூல்கள் எல்லாராலும் படித்துணர வேண்டிய கருவூலம். இத்தகைய பல செய்திகளை உள்ளடக்கிய அற்புதமான நூல்தான் வீர சாவர்க்கர்.
குமரய்யா