அவசரமும், ஆவேசமும் போட்டா போட்டியும் நிறைந்துவிட்ட இன்றைய வாழ்வில், யதார்த்த நிலையில் வாழ்வில் வெற்றி காணும் வழிகளை இந்நூல் வகுத்துக் காட்டுகிறது.
போட்டி, பொறாமைகளைத் தவிர்த்து, உறவினர்கள், நண்பர்கள் உடன் நேசம் பாராட்டுதலும், தேவையற்ற சர்ச்சைகள், விவாதங்களைத் தவிர்த்ததும் மன அழுத்தத்தை நீக்கி நிம்மதியைத் தரும். உயர்வான வாழ்வையும் தரும் என, ஆசிரியர் விளக்கியுள்ளார்.
மனிதவள துறை பயிற்சியாளரான ஆசிரியர், மேலாண்மையும் பயின்றவர். மாற்றங்கள் வேண்டும் என, வலியுறுத்தியும் பல நல்ல கருத்துகளை வடித்துள்ளார். இவற்றுள் பலவும் காலம் காலமாக சொல்லப்பட்டும் எழுதப்பட்டும் வந்தவைதாம். படித்து நினைவூட்டிக் கொள்ளலாமே.
கவிக்கோ ஞானச்செல்வன்