புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம்; சிறுகதைகளில் பெரும் புரட்சியும், புதுமையும் செய்தவர் இவர். புதுமைப்பித்தனின் வாழ்க்கைக் குறிப்பும், புதுமைப்பித்தன் கூறிய சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும், புதுமைப் பித்தனைப் பற்றி அறிஞர்களின் கருத்துரைகளும், இவரது நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முத்தான கருத்துரைகளும், கடிதங்கள், மதிப்புரைகள் ஆகியனவும் அடங்கியது இந்நூல்.
சிறிய நூல் என்னும் புதுமைப்பித்தனைப் பற்றித் தெரியாதவர்கள், தெரிந்து அறிந்து கொள்ள, நிரம்பச் செய்திகள் இதில் உள்ளன. ‘அளவில் சிறிதாக இருந்தால் மட்டும், சிறுகதையாகி விடாது; குறிப்பிட்ட ஒரு நிகழ்வை விவரிப்பதாக இருக்க வேண்டும். கவிதை, கருத்துப் பரப்புரையாக (பிரசாரமாக) இருந்தால், அது செத்துவிடும்’ போன்ற அருமையான வரிகளை நினைவூட்டும் நூல். பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ‘அழகின் சிரிப்பு’ நூலுக்குப் புதுமைப்பித்தன் எழுதிய மதிப்புரை படிக்க வேண்டிய ஒன்று.
கவிக்கோ ஞானச்செல்வன்