மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனாரின் திருமகள் மணிமேகலையார் படைத்தளித்துள்ள நூல் இது.
தமிழ்மொழியின் சிறப்பில் துவங்கி, தமிழ் இலக்கணம் குறித்தும், ஒற்றுப்பிழைகள், வலி மிகுதல், வலி மிகாமை குறித்தும், தவறும் சரியும் ஆகும் சொற்கள் பற்றியும் எழுதி, தமிழின் தலையாய நூல்களையும் குறிப்பிட்டு நூல் நிறைவு பெறுகிறது.
அறிஞர் பலர் தமிழில் பிழையின்றி எழுத வழிகாட்டியுள்ளனர். அந்த வரிசையில் அண்மையில் வெளிவந்த, ‘பிழையின்றித் தமிழ் பேசுவோம் எழுதுவோம்’ நூலையடுத்து, இந்நூல் வெளிவந்துள்ளது. நிரம்ப எடுத்துக்காட்டுகள், குழப்பம் தராத குறிப்புகள் கொண்டுள்ள இந்நூல், நல்ல தாளில் அருமையான அச்சு அமைப்பில் வெளி வந்துள்ளது. பாராட்டத்தக்க நல்ல முயற்சி; பயன்தரும் நல்ல நூல்.
கவிக்கோ ஞானச்செல்வன்