இன்றைய அரசியலின், சர்ச்சைக்குரிய மற்றும் அதிக நம்பிக்கைக்குரிய முகமாக பார்க்கப்படுவது மோடி தான். அவரது பிறப்பில் இருந்து, தற்போதைய பிரதமர் வேட்பாளர் வரை, அனைத்து விஷயங்களையும் இந்த புத்தகம் விளக்குகிறது.
கோத்ரா கலவரம் தொடர்பாக, டில்லியில் உள்ள சர்வதேச விவகாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான சபை அமைத்த நீதிபதி திவத்தியா குழுவின் விசாரணை முடிவுகளில் முக்கியமானவற்றை ஆசிரியர், இதில் சேர்த்திருக்கிறார்.
மேலும், 1964 முதல், 2002 வரை இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த கலவரங்கள், அவை நடந்தபோது அந்தந்த மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது என்று சுட்டிக்காட்டி, மோடி மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுகளில் அர்த்தம் இல்லை என்பதை நிறுவ முயன்றுள்ளார்.
குஜராத் பற்றியும், மோடி பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புவோருக்கு, இந்த புத்தகம் மிகவும் உதவும்.