முகப்பு » ஆன்மிகம் » அதிசய சித்தர் போகர்

அதிசய சித்தர் போகர்

விலைரூ.90

ஆசிரியர் : எஸ்.சந்திரசேகர்

வெளியீடு: கற்பகம் புத்தகாலயம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் பொற்கொல்லர் வகுப்பைச் சேர்ந்தவர். திருமூலரை தன் பாட்டனாராகவும், காலாங்கி சித்தரை தன் தந்தையின் ஸ்தானத்திலும் வைத்து, அவர்கள் பாதம் பணிவதாக தன்னுடைய போகர் 7,000 என்ற நூலில் விவரித்து உள்ளார்.
போகர் தன் குரு காலாங்கி சித்தர் கட்டளைப்படி, சீன தேசம் சென்று, தனது ‘பரகாய பிரவேச’ சித்து மூலம் சீன முதியவர் ஒருவர் உடலில் புகுந்து, சீன மக்களுக்கு பல போதனைகளும் புரிந்தார் என்றும் லாவோட்சி என்ற சீன ஞானி அவரே என்றும் பின்பு கி.மு.400ம் ஆண்டு வாக்கில் சீனாவைக் கடந்து இமயமலை வழியாக இந்தியா வந்து தன் சீன அனுபவத்தை சப்த காண்டமாக எழுதினார் என்றும், அது தன் சீடர் புலிப்பாணிக்காக போகர் இயற்றிய நூல் என்றும் நூலாசிரியர் விவரிக்கிறார். மற்றும் போகரின் ஜால வித்தைகள், ரசவாத வித்தைகள், பலவித கற்பங்கள் தயாரிக்கும் முறைகள், அவற்றின் பயன்கள் என்று ஆசிரியர் விவரிக்கும்போது, படு பிரமிப்பாக இருக்கிறது.
மயிலை சிவா

Share this:

வாசகர் கருத்து

prabhakarvinayagam - vellore,இந்தியா

dinamalar doing great work but you can make it simple by online trading option

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us