மாபெரும் கடல் போன்ற மகா பாரதக் கதையை இருபத்து மூன்று அத்தியாயங்களில் எளிய, இனிய ஆங்கிலத்தில் அழகாகச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். வழவழப்பான அழகிய தாள்கள். கண்ணுக்கு இனிய சித்திரங்கள். எல்லாரும் ஆங்கிலத்தில் விஷயங்களை அறிந்து கொள்ள விரும்புவது இப்போது அதிகரித்து வருகிறது. அமெரிக்க வாழ் இளைஞரான ஆசிரியர், அங்கு ‘யு–ட்யூப்’ மூலம் கதைகளைச் சொல்லி, அதற்கென தனி ஆர்வலர்களை கொண்டிருக்கிறார். கதை சொல்லி விளக்கும் இவரது பாணி சிறுவர், சிறுமியரை நிச்சயம் ஈர்க்கும். எஸ்.குரு