இரண்டாயிரம் ஆண்டு பழமையான ஊர், பிரிட்டிஷ்காரர்கள் முகாம் அமைத்து போரிட்டு, நம் ஆட்சியாளர்களை அகற்றிய தலம் என்று பல ஆதாரபூர்வ தகவல்களை தந்திருக்கிறார் ஆசிரியர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இந்த ஊர், வரலாறுகள் நிரம்பிய ஊர் என்பதை அழகாக தொகுத்த ஆசிரியர் பாராட்டிற்குரியவர். பிரிட்டிஷார் எழுதிய வரலாற்றுத் தகவல்கள் ஒரு சார்பாக இருந்திருக்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் பல உண்மைத் தகவல்கள் இதில் உள்ளன. தவசி