மாதம், 17 ரூபாய் ஊதியம் பெற்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் ஏழு குழந்தைகளில் ஒருவர், தினமும், 10 கி.மீ., நடந்து வந்து பள்ளியில் படித்தவர், அனைத்து இந்தியாவிலும், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற முதல் ‘தலித் மகன்,’ தலைமைச் செயலர், கவர்னர் என, உழைப்பால் உயர்ந்தவர். உலகக் கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், சிறந்த ஆட்சியாளர் என்ற ஆளுமையின் உயர்ந்த அத்தனை பரிமாணங்களும் கொண்ட சாதனையாளர் வேறு யாருமல்ல டாக்டர் ஆ.பத்மநாபன் தான் என்பதை இந்த நூல் இனிதாக விளங்குகிறது.
திருச்சியில் பத்மநாபன் சப்–கலெக்டராக இருந்தபோது, நரிக்குறவர்களுக்கு குடியிருப்பு கட்டித் தந்தார்.
தவறுகளைத் தண்டித்தும், தவறு செய்பவரை மன்னித்தும், அவர் ஆற்றிய பல ஆட்சி முறைகள் இன்றைய ஆட்சியாளருக்கு பாடநூலாகவும் இந்நூல் திகழ்கிறது.
முனைவர் மா.கி.ரமணன்