இந்திய திரு நாட்டின் இருபெரும் இதிகாசங்களில், மகாபாரதமும் ஒன்று. இதில், பல்வேறு கிளை கதைகள்; ஏராளமான கதை மாந்தர்கள் இந்த இதிகாசத்தை தாங்கி நிற்பர். அதில், மிக முக்கிய இடம் பிடிப்பவர் கிருஷ்ணன். அவரை, மையமாக கொண்டு, இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
‘கிருஷ்ணன் ஜனனம்’ என, முதல் இயல் துவங்கி, ‘கிருஷ்ண அவதார பூர்த்தி’ யை தொடர்ந்து, ‘கீதை’ வரை, மகாபாரதத்தில் கிருஷ்ணனின் பங்கை, ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார். மகாபாரத இதிகாசத்தில், மற்ற கதை மாந்தர்கள் பகுதிகளை, மிக சுருக்கி, தான் கையாள எடுத்துக் கொண்ட நாயகன், கிருஷ்ணன், இடம் பெறும் காட்சிகளை மட்டும், அழகான வர்ணனைகளோடு, தெளிவாக எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். இது, நல்ல நூல்.
சி.சுரேஷ்