மாணிக்கம், அளம், கீதாரி – போன்ற நாவல்கள் மூலம், உழைக்கும் பெண்களின் உலகை, அதன் பூரண தியாகங்களுடனும், ரணங்களுடனும் காட்டினார் தமிழ்ச்செல்வி. ‘கற்றாழை’ இவரது நான்காவது நாவல்.
‘கற்றாழை’ என்னும் தாவரம் எத்தகைய வறட்சியிலும் தன்னைக் காத்துக் கொண்டு உயிர் வாழும். மணிமேகலை என்ற இந்த நாவலின் கதாநாயகி, தன் வாழ்வில் ஏற்படும் சோதனைக் கட்டங்களை எல்லாம் தீரத்துடன் எதிர்கொண்டு, கடைசியில் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறாள். திருப்பூர் பனியன் கம்பெனிகளை நம்பி வாழும் எண்ணற்ற ஜீவன்களை, நாவலாசிரியர் நாவலின் இறுதியில் தீட்டிக் காட்டும்போது, கண்கள் பனிக்கின்றன. உள்ளத்தை உருக்கும் உன்னத நாவல்.
எஸ்.குரு