அந்தோன் செகாவ், ரஷ்ய சிறுகதை சக்ரவர்த்தி. சிறுகதைகளைக் காட்டிலும் சற்று நீளமானதும், நாவல்களைக் காட்டிலும் சற்று சிறியதுமான, ‘பலப்பரீட்சை’ மற்றும் ‘வாழ்க்கை’ எனும் இரு குறு நாவல்களை, ஒரே தொகுப்பாக வெளியிட்டிருக்கின்றனர்.
மத்திய தர வர்க்கத்தினரைப் புறக்கணித்து, உழைப்பாளி மக்களோடு வாழச் சென்று, அங்கு குறுகிய கண்ணோட்டங்களின் மோசமான
விளைவுகளை மன ரீதியால் எதிர்கொள்ள நேரிடும் ஒரு கலகக்கார இளைஞனின் கதை தான் வாழ்க்கை. பலப்பரீட்சை – மனித பலவீனத்தின் மன்னிப்பிற்கான வாய்ப்புகளைப் புறந்தள்ளி, தன் கொடூரத்தால், அன்பு சார்ந்த வழிமுறைகளை மாற்றிக் கொள்ளும். மனிதனின் இறுதியான நடவடிக்கைகளைப் படம் பிடிக்கிறது! நல்ல மொழி பெயர்ப்பு. ரஷ்ய இலக்கியப் பொக்கிஷம்!
எஸ்.குரு