முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலட்சுமி, செட்டிநாட்டு மண்ணில் பிறந்து, சிங்கப்பூர் சீமையில் செந்தமிழ் வளர்ப்பவர். அவரது இந்த நூல் கம்பனின் பெண் கதை மாந்தர்களை, பெண்ணிய நோக்கில், புதிய கோணத்தில் கூராய்வு செய்கிறது. ராமபிரானை பார்த்த மாத்திரத்தில் ஒரு பெண், தன் உயிரை தவிர அத்தனையும் இழந்தாள் என்று கம்பன் பாடியிருப்பது, பெண்ணிய நோக்கில் விவாதிக்க இடம் தருவது என்கிறார் நூலாசிரியர்.
கம்பர் மகளிர் பற்றி பாடியுள்ள செய்திகள், ஆணாதிக்க சமுதாயத்தின் குரலாகவும், அதன் வெளிப்பாடாகவும் அமைகிறது. கம்பர் கால சமூக கட்டமைப்பில், பெண்களின் நிலை பற்றி அறிய ராமகாதை உதவுகிறது என்பது நூலாசிரியர் கருத்து. கம்பர் பெண்கள் பால் பரிவும், மதிப்பும் கொண்டவர் என்பதையும் இந்த ஆய்வு நூல் உணர்த்துகிறது.
ஜி.வி.ஆர்