பதினான்கு நூல்களை எழுதி தள்ளிய எழுத்தாளன், வீரம் கொண்டு துப்பாக்கி பிடித்து ராணுவ வீரனானவர், ஓவியராக திகழ்ந்தவர், இரண்டு முறை பிரிட்டனின் பிரதமராக விளங்கியவர், வின்ஸ்டன் சர்ச்சில். போரும் வீரமுமே வாழ்வாக, 23 வயதில் துவங்கிய அவரது போராட்ட வாழ்வு, 90 வயது வரை நீண்டது. துணிவுக்கு மறுபெயரான சர்ச்சிலின் போர் அனுபவங்கள், 20 நூல்களாக வெளிவந்துள்ளன.இரண்டு உலக போர்களை முன்னின்று நடத்தியதும், ஹிட்லருக்கு சவால் விட்டதும், இந்த நூலில் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ‘சாவ்ரோலா’ என்ற நாவலை எழுதிய இவர், அந்த கதாநாயகனின் அதிரடி வெற்றிகளை கற்பனையில் கண்டதை, இவர் வாழ்விலும் அடைந்தது வியப்புக்கு உரியது.
வீரமும், நேர்மையும், கடும் உழைப்பும், பிடிவாத குணமும் கொண்ட சர்ச்சில், பலமுறை தோல்விகளில் இருந்து மீண்டு எழுந்த வரலாற்றை, இந்த நூல் அழகாக பதிவு செய்துள்ளது.
முனைவர் மா.கி.இரமணன்