வருடம் தவறாமல் நமது வேடந்தாங்கல்லுக்கு, கண்டங்களையும் கடல்களையும் தாண்டி வரும் பறவைகளைப் பாருங்கள். எத்தனை பெரிய நம்பிக்கையோடு அவை வருகின்றன! வாயிலே ஒரு மரக்குச்சியை கவ்விக்கொண்டு மனம் நிறைய நம்பிக்கையோடு பறந்து வரும் பறவையின் நம்பிக்கை, நம்மில் எத்தனை மனிதர்களுக்கு இருக்கிறது? தயவுசெய்து சீக்குப்பிடித்த சிந்தனைகளையும் அழுக்குப்பிடித்த மூளைகளையும் அப்புறப்படுத்தி விடுங்கள்.
குப்பைகளைக் கொட்டிவைக்கும் குப்பைத்தொட்டியல்ல மனம் என்பதை உணருங்கள். நல்ல எண்ணங்களால் மனதினை நிரப்புங்கள். நம்பிக்கையுடையவர்களையே உலகம் தேடுகிறது.
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்., கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் சங்கர ராமனின் நான்காவது வெளியீடு தான், ‘அறிவுரைகள் ஜாக்கிரதை’.
வார்த்தைகளையே வாழ்க்கையாய் வாழ்ந்து காட்டிய விவேகானந்தர், பாரதியையும் நடைபோட வைத்திருக்கிறார்.
எம்.எம்.ஜெ.,