‘யோகாவா... அதெல்லாம் வயசானவங்களுக்கு மட்டும் தானே தேவை?
கல்லையும் தின்னு செரிக்குற வயசு இது... கையைக் காலை வளைச்சு, என்னத்தக் காணப் போறோம்’ன்னு, இள வட்டங்கள் நினைக்க, ‘அப்படி நினைக்காதீர்கள். வாழ்க்கையில் வெற்றி பெற, பள்ளிப் பருவத்திலிருந்தே யோகா செய்து வருவது மிக மிக நல்லது’ என்கிறது இந்நூல்.
யோகா செய்வதால், உடற்கூற்றியல் ரீதியாக என்னென்ன நன்மைகள் விளைகின்றன என்பதை, மிகத் தெளிவாக, புகைப்படங்களுடனும், வரைபடங்களுடனும் விளக்குகிறது. உடல் ஆரோக்கியம், மன அமைதி, நினைவுத் திறன் அதிகரித்தல், சூழலைப் புரிந்து கொள்ளும் ஆற்றல், முழு ஈடுபாட்டுடன் பணிகளைச் செய்து முடித்தல் உட்பட, பற்பல நலனை அளிக்கிறது யோகா என்கிறார் ஆசிரியர். சில மாதங்களிலேயே, தோலின் தன்மை கூட, இதமாக மாறி விடும். நல்ல, அமைதியான தூக்கம், தீர்க்கமான சிந்தனை, தெளிவான நோக்கம் என, நன்மைகளை அடுக்கும் ஆசிரியர், நல்ல மாற்றங்கள் வேண்டுவோர், தொடர் முயற்சி செய்ய வேண்டும் என்கிறார். அக்கறையுடன் வாங்கி, அக்கறையுடன் படித்து, அக்கறையுடன் பயிற்சி செய்தால், இக்கரை தான் பச்சை என்பது, அனைவருக்கும் புலப்படும்!
சண்பகவல்லி