முகப்பு » வரலாறு » புலி­களின்

புலி­களின் புதல்­வர்கள்

விலைரூ.275

ஆசிரியர் : பா.விஜய்

வெளியீடு: புதிய தலைமுறை பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கவி­ஞ­ராக அறி­யப்­பட்ட பா.விஜய், இந்த புத்­த­கத்தில், ஒரு ஆய்­வா­ள­ரா­கவும் தன்னை வெளிப்­ப­டுத்தி உள்ளார். 1,800 ஆண்­டு­க­ளுக்கு முன், தமி­ழகம் எப்­படி இருந்­தது என்­பதை, இலங்­கியம் மூலம் காட்­சிப்­ப­டுத்தி உள்ளார். தமிழ் சினி­மாக்­களில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டதை போன்று, பண்­டைய தமிழ் சமூ­கமும், மன்­னர்­களும் இருந்­த­தில்லை; உடல் முழுதும் நகை­களை பூட்டிக் கொண்டு திரி­ய­வில்லை; மது குடித்­தனர்; மாமிசம்  உண்­டனர் என, நிஜத்தை எடுத்­து­ரைத்­துள்ளார். அதற்கே அவ­ருக்கு ஒரு சபாஷ்.
1,300 ஆண்டு கால யுத்­த­முமே, சகோ­தர சண்­டைகள் தான். புற­நா­னூறு பூரிக்­கின்ற படைப்­பெல்லாம், ஓர் இனத்­துக்குள் நடந்த ரத்­த­வெறி ஆட்­டத்தைப் பற்­றி­யது தான் என்று திடமாய், தன் கருத்தை முன்­வைக்­கிறார் நூலாசிரியர்.
‘உருண்ட தலைகள் தமி­ழ­ரு­டை­யவை; உருட்­டிய கைகளும் தமி­ழ­ரு­டை­ய­வையே. இதற்குப் பெய­ராக, நாம் பெரு­மைப்­பட்டு சூட்டிக் கொண்­டது தமிழர் வீரம். ஒன்­றாக இணைந்து, ஆட்சி நடத்த தெரி­யாத அறி­யா­மைக்கு, இன்­னொரு அழ­கான இடு­குறிப் பெயர் இது. தென்­தேசம் மட்­டு­மா­வது ஒன்­றாக ஒரு புள்­ளியில் நின்­றி­ருந்தால், 6,000 மைல் தாண்டி வந்து ஆங்­கி­லேயன், தமி­ழ­னு­டைய தலை­மு­டி­யைக்­கூட வெட்­டிப்­பார்த்­தி­ருக்க முடி­யாது’ என, ஆவே­சப்­ப­டு­கிறார்.
கரி­கா­லனின் அறி­மு­கத்தில் துவங்கும் இந்த புத்­தகம், பங்­காளி சண்­டையில் மோதிக்­கொண்ட நலங்­கிள்ளி – நெடுங்­கிள்ளி; சுனா­மியில் பலி­யான கிள்­ளி­வ­ளவன்;  வர­லாறே அறிய முடி­யாத கி.பி. 5 – கி.பி. 8 வரை­யி­லான கால­கட்டம்; பராந்­தகன் உரு­வாக்­கிய சேத்­தி­யா­தோப்பு ஏரி என, வர­லாற்றின் மேடு­பள்­ளங்­களில் ஏறி இறங்கி, ராஜ­ராஜ சோழன் என்ற அருண்­மொ­ழித்­தேவன் ஆட்சி ஏறும் வரை, வந்­தி­ருக்­கிறார் விஜய்.
சோழ மன்­னர்கள் வர­லாற்­றோடு, அன்­றைய மருத்­துவ முறை, அலங்­கா­ரங்கள், உணவு வகைகள் (அதில், பிரி­யா­ணியும் உண்டு)
உள்­ளிட்ட அன்­றைய தமி­ழர்­களின் வாழ்­­வி­யலை, எளி­மை­யாக தந்­தி­ருக்­கிறார். புத்­த­கத்தில், எழுத்தின் அளவு சிறி­ய­தாக இருப்­பது மட்­டுமே, சற்று அயர்ச்­சியை தரு­கி­றது.
எண்­ணற்ற தக­வல்­களை தேடி கண்­டெ­டுத்த பா.விஜயின் உழைப்பு, இந்த புத்­த­கத்தில் தெரி­கி­றது. நம் வர­லாற்றை, ஒப்­பனை இல்­லாமல் தெரிந்­து­கொள்ள, புலி­களின் புதல்­வர்கள் வாசிக்­கலாம்.

சி.சுரேஷ்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us