முகப்பு » வரலாறு » கர்ணா! நீ மஹத்­தா­னவன்

கர்ணா! நீ மஹத்­தா­னவன்

விலைரூ.80

ஆசிரியர் : ஆர்.பி.வி.எஸ்.மணியன்

வெளியீடு: வர்ஷன் பிரசுரம்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தானம் செய்­கி­ற­வர்­களை கர்ண பிரபு என்று அழைப்­பது நடை­மு­றையில் நாம் பார்ப்­ப­துதான். தான வீரன் கர்ணன் என்­றும்­கூட நாம் நினைத்­தி­ருக்­கிறோம். ஆனால், வியாச பார­தத்தில் ஒரு இடத்­தில்­கூட வறி­ய­வர்­க­ளுக்கு தானம் அளித்தான் என்ற வர­லாறு இல்லை. ஆனால் எப்­படி அவன், தான வீரன் என்று பெயர் பெற்றான் என்­பதை இந்த புத்­தகம் சுவை­யாக தெளி­வு­ப­டுத்­து­கி­றது. கர்ணன் வெறும் கொடை­யாளி மட்­டு­மல்ல, மிகச்­சி­றந்த நட்­புக்கும் இலக்­க­ண­மா­னவன். பாண்­ட­வர்­களே வியந்து அஞ்சும் அள­வுக்கு வில்­வித்­தையில் நிபு­ணத்­துவம் பெற்­றவன்.
எவர், எந்த ஒரு நிலை­யிலும் தன்னைப் பெற்­ற­வர்­க­ளையும் தனது குடும்­பத்­தையும் பெரு­மை­யாக நினைக்­கி­றார்­களோ, அவர்­களே உண்­மை­யான சுய­ம­ரி­யா­தை­யு­டை­ய­வர்கள். அந்த வகையில் கர்ணன், துரி­யோ­த­னனால் அங்க தேசத்­திற்கு மன்­ன­னாக முடி­சூட்­டப்­பட்ட உடன், தேர் சார­தி­யான தன் தந்­தையை, அவை­யோ­ருக்கு அடை­யாளம் காட்ட தயங்­க­வில்லை.
பட்­டா­பி­ஷே­கத்தால் நனைந்த தன் உடை­க­ளோடு ஓடோடிச் சென்று, தன் தந்­தையின் கால்­களில் விழுந்து வணங்கி ஆரத் தழுவி மகிழ்ந்­தவன் கர்ணன். வியாச பார­தத்தில் இருந்து, வில்­லி­புத்­துாரார் எழு­திய பார­தத்தில், கர்­ண­னு­டைய வர­லாறு மாறு­படும் இடத்­தையும் இந்நூல் அல­சு­கி­றது.
இந்­நூலை படித்து முடிக்­கிற பொழுது, நம் உள்­ளத்­திலும் தோன்றும் உணர்வும் இதுதான் – கர்ணா! உண்­மை­யி­லேயே நீ மஹத்­தா­னவன் தான்.
மவெ

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us