விடுதலை இயக்கத்தில் பங்குபெற்ற வேலு நாச்சியார், கட்டபொம்மன், வ.உ.சி., திரு.வி.க., ம.பொ.சி., ஜீவானந்தம், கக்கன் போன்ற தமிழகத் தியாகச் செம்மல்களின் வரலாறுகளை தெளிவாகத் தொகுத்து, எழுதப் பெற்றுள்ள நூல். அண்ணல் காந்தியடிகள், தமிழகத்தில் பயணம் செய்தபோது நிகழ்ந்த நிகழ்வுகள், அழகாகப் பதிவு செய்யப் பெற்றுள்ளன.
தேசியக் கொடி பற்றிய கட்டுரையில், தேசியக்கொடியின் தோற்றம், அமைப்பு, அளவு வரையறை, வண்ணங்கள், சக்கரச்சின்னம் முதலியவற்றை விளக்கி, சுதந்திரக் கொடியான மூவர்ணக் கொடியின் வரலாறு விளக்கப் பெற்றுள்ளது. தேசியக் கொடியைப் பயன்படுத்தும் நெறிமுறைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.
தமிழகத் தலைவர்களை விளக்கும் வரலாற்று நூலாக அமைந்த இந்த நூலை, மாணவர்கள் முதல், அனைவரும் படித்து பயன்பெறலாம்.