விசுவ இந்து பரிஷத் நடத்தி வந்த, ‘இந்து மித்திரன்’ இதழில், நூலாசிரியர் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு, இந்த நூல்.
‘பேசுவது பழங்கதை அல்ல’ என்பது முதல் போதி தர்மர் வரை, 31 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ‘உலகத்தின் இயக்கத்திற்கு ஆதாரமாய் இருக்கும் அணு இயக்கத்தை, டாக்டர் பிர்டஜாப் காப்ரா என்ற விஞ்ஞானி புகைப்படமாக எடுத்திருக்கிறார்; இதையே, நம் முன்னோர்கள், சிவனின் ஆனந்த தாண்டவமாக வர்ணித்திருக்கின்றனர்’ என, விளக்கி உள்ளார்.
இதுபோன்று, நம் முன்னோர்கள், சித்த மருத்துவம், இயற்பியல், வேதியியல், கணிதம், நீர் பாசனம், விமான இயல், போர் ஆயுதங்கள், வான இயல் என, அனைத்திலும், இந்த உலகிற்கு முன்னோடியாக இருந்துள்ளனர் என்பதை, ஆதாரங்கள் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.
உலகின் மிகப்பெரிய கோவிலான, கம்போடியா நாட்டில் உள்ள விஷ்ணு கோவில், இரண்டாம் சூரிய வர்மனால், கி.பி., 1113 – 1150ல் கட்டப்பட்டது என்பது உள்ளிட்ட ஏராளமான தகவல்களை தந்துள்ளார்.
சரண்யா சுரேஷ்