ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், 142 சுலோகங்களின் பொருளை, குரு சீடர் வினா – விடை மூலம் விளக்கம் தருகிறது இந்த நூல். தர்மபுத்திரருக்கு அம்புப் படுக்கையில் இருந்தபடி பீஷ்மர் சொன்ன கண்ணனின் பெருமையே இவை. 13 சுலோகங்கள் முன்னுரையாகவும், விஷ்ணு சகஸ்ரநாமத்தின் பயன், 22 சுலோகங்களாகவும், மகாவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்கள், 107 சுலோகங்களாகவும் உள்ளன.
சிஷ்யனின் கேள்வி: ஒவ்வொரு உடம்பிலுள்ள ஜீவனிலும் பகவான் இருக்கிறார். ஆனால், ஜீவன் அழிந்து விடுகிறதே ஏன்?
குருவின் விடை: பகவான் அழிவது இல்லை. விஷ்ணு சகஸ்ரநாமத்தில் அக்ஷர: (17) அழியாதவன் என்று ஆண்டவன் கூறப்பட்டுள்ளார். (பக்.10).
பெருமாளின் சங்கு பாஞ்சஜன்யம், வாள் நந்தகம், வில் சாரங்கம், கதை கவுமோதகி இருந்தாலும், சுதர்சன சக்கரத்தையே தயாராக வைத்துள்ளதால், ரதாங்கபாணி (998) என்று அழைக்கிறோம் (பக்.409). விரிவான விஷ்ணு சகஸ்ரநாம விளக்க நூல்.
முனைவர்.மா.கி.ரமணன்