ஒரு நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்த தமிழ்ப் பெரும் புலவர் குலாம் காதிறு நாவலர்; பாண்டித்துரை தேவர், பாஸ்கர சேதுபதி, மு.ராகவையங்கார் போன்றோரோடு இணைந்து, மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டவர். புலமைத்திறம் மிக்கவராக, உரைநடை வல்லுனராக, மொழிபெயர்ப்பாளராக, நாவன்மை கொண்ட நாவலராக இயங்கிய, குலாம் காதிறுவின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும், அவர்தம் அளப்பரிய தமிழ்ப்பணிகளும், பெருங்குணங்களும், நூலில் குறிக்கப்பட்டு உள்ளன. சிற்றிலக்கியங்கள் பல படைத்தவர். இவரது நாகூர்ப்புராணம் குறிப்பிடத்தக்கதொன்று. புலவராற்றுப்படை, தமிழ்க்கவி மரபுகளைக் காத்துப் போற்றும் சிற்றிலக்கியம்.
நாவலர், நாவன்மை மிக்கவர் என்ற பெயர் பெற்ற, நல்ல தமிழ்ப் பேச்சாளர் இவர். இஸ்லாமிய தமிழ் புலவர்கள் வரிசையில் குறிப்பிடத்தக்க பெருமை கொண்டவர் நாவலர். சாகித்ய அகாடமியின் பதிப்புத்தரம் இந்த நூலிலும் பளிச்சிடுகிறது.
கவிக்கோ ஞானச்செல்வர்