ராகிலாவின் எழுத்து, லட்சிய எழுத்து. ஒவ்வொரு கதையும், ஒரு நீதியை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன், அவர் இந்தச் சிறுகதைகளை எழுதி இருக்கிறார். ௧௮ சிறுகதைகள், இந்தத் தொகுதியில் இருக்கின்றன. எல்லாமே, மணி மணியான கதைகள்.
முதியோர் இல்லங்களில், பெற்றோரை தவிக்க விடாதீர்கள் என்று சொல்லும் முதல் கதையான, ‘உறவுகள் பிரிவதற்கல்ல’ கதை அருமை. பல சிறுகதைகளில், அருமையான குணச்சித்திர வார்ப்புகள். ‘குட்டச்சிக் கிழவி’ என்ற கதையில் வரும் குட்டச்சிக் கிழவி, மகப்பேறு வைத்தியம் பார்க்கும் மருத்துவச்சி.
‘உங்கள் குழந்தைகளை, பள்ளியில் படிக்க வைக்கிறேன் என, சத்தியம் செய்தால் தான், பிள்ளைப் பேறு பார்ப்பேன்’ என, சொல்கிறாள், அந்த மூதாட்டி. பரிசளிக்க உகந்த புத்தகம்.
எஸ்.குரு