இந்த நூற்றாண்டின் நடமாடும் தெய்வமாக உலா வந்த உத்தமர் மகா பெரியவர், காஞ்சி ஸ்ரீ காமகோடி ஸ்ரீமத் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்பது, இந்த வையகம் நன்கறியும். இந்த மகா அவதாரத்தை பக்தி செய்து வழிபட்ட பாக்கியசாலிகள் பலர்.
வேண்டுவோருக்கு வேண்டுவதை எல்லாம் நெறி பிறழாது வாரி வழங்கிய ஞானக்கடல். கசிந்து கண்ணீர் மல்க வேண்டினால் நோய்களை நொடிப் பொழுதில் தீர்த்து வைத்த அருட்செல்வர். எண்ணியதை எண்ணியவாறு எமக்கருளும் கண்கண்ட தெய்வம் என, ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களைத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர்.
படிக்கப் படிக்க, ஒரு நாவலைப் படிப்பது போன்று உள்ளது. 55 பக்தர்களின் வாழ்வில், மகா பெரியவர் அவர்கள் விளையாட்டாக ஆற்றிய அனுக்கிரகங்களை பதிந்துள்ள பாங்கு மெய்சிலிர்க்க வைக்கிறது.
குமரய்யா