யதார்த்தங்களின் வடிவமாய் நிஜமான வாழ்வியல் நிகழ்வுகளை பதிவு செய்திருக்கும் அருமையான சிறுகதை தொகுப்பு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளிடம் நேர்முக எழுத்தராக பணிபுரியும் குன்றக்குடி சிங்கார வடிவேல், இந்த நூலை எழுதி இருக்கிறார்.
குன்றக்குடிக்கே உரித்தான குன்றாய் நிமிர்ந்து நிற்கும் சொல்நடை, குறையாத வார்த்தை வளத்தால் கதைகளை ஒரே மூச்சில் படித்துவிட முடிகிறது. பதினாறு கதைகளும், பதினாறு வகையாக தோன்றுகிறது. ‘இளைப்பாறும் சுமைகள்’, ‘கொள்ளிக்காசு’, ‘நான் விற்பனைக்கல்ல’, ‘அன்பு வலி’ போன்ற சிறுகதைகளின் தலைப்புகள் புதுமை; பொருத்தமானவை. படிக்க தூண்டுகின்றன. தண்ணீரின் அவசியம், பாலிதீன் பைகளால் ஏற்படும் ஆபத்தை விளக்கிடும் ‘உயிர்த்துளி’ கதை நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
ஜி.வி.ஆர்.,