இந்நால் ஆசிரியர், இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னணி கல்வி நிலையங்களில் பேராசிரியராக, முதல்வராக பணியாற்றியவர். இவர், தான் பயணம் சென்ற நாடுகளில், படித்த புத்தகங்களில், பெற்ற அனுபவங்களை, கதை வடிவில் எழுதி உள்ளார். தான் சொற்பொழிவுகளில் கேட்டது முதல், தன் தாத்தா கூறியது வரையிலான, 100 கதைகளை தொகுத்திருக்கிறார்.
‘கவலைக்கும், பரிதவிப்புக்கும் ஏற்ற சிறந்த மாற்று மருந்து, வேலை; எடிசனின் சில நிமிட பொறுமை, ஒரு லட்சம் டாலர்களை பெற்றுத்தந்தது; இலவசமாக வழங்கப்படும் எதற்குமே மதிப்பு இருக்காது’ போன்ற பல்வேறு கருத்துகளை, ரசிக்கும் வகையில்
தொகுத்திருக்கிறார்.
புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்துள்ள எஸ்.ராமன், குறை சொல்ல முடியாத அளவிற்கு, தன் பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.
சாதாரண ஒரு சம்பவம் அல்லது கதை; அது தொடர்பான ஒரு கேள்வி; அது உணர்த்தும் கருத்து – இது தான் இப்புத்தகம். ஆனால், அத்தனையிலும், வாழ்வின் சாரம்சங்களை தொட்டிருக்கிறார்.
கலா தம்பி