நோயின் தாக்கம் முற்றிய நிலையில், ‘ஒன்றும் செய்ய முடியாது’ என, டாக்டர்கள் கைவிரித்து விடுகின்றனர். நோயின் தாக்கத்தால் ஏற்படும் வலியாலும், உறவுகள் புறக்கணிப்பால் மனரீதியான பாதிப்பாலும், மரண நாட்களை நெருங்கும் துன்பத்தாலும் நோயாளிகள் துவண்டு விடுகின்றனர். அத்தகையோருக்கு, மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த நிலையில், அன்பு, ஆதரவு, அரவணைப்பு என்ற, ‘வலி தணிப்பு சிகிச்சை – பாலியேட்டிவ் கேர்’ தேவை.
மேலை நாடுகளில், இந்த வகை சிகிச்சை முறை பிரபலம் என்றாலும், நம் நாட்டில் பெரிய விழிப்புணர்வு இல்லை. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, ‘இனி ஒரு வலியில்லா பயணம்...’ என்ற நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். கதைகள் வழியாக, புற்றுநோயாளிகளின் அவதியை விவரித்துள்ள அவர், மரணத்தின் பிடியில் உள்ளோரின் கோபத்துக்கு இதமும், அன்பும் தான் தேவை என்கிறார்.
எளிய நடையில் உள்ளதால், இந்த நூல், ‘வலி தணிப்பு சிகிச்சை’ குறித்த விழிப்புணர்வை நிச்சயம் ஏற்படுத்தும். அதேநேரத்தில்,
பக்கத்தை வரிசைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தவிர்த்திருக்கலாம்.
ஆர்.குமார்