தமிழர் வாழ்வில், தகவலியல் செயல்பாடு பற்றிய வழிமுறைகளை பற்றி ஆராய்கிறது இந்த நூல். பழந்தமிழ் இலக்கியங்கள், தகவல்களை பயன்படுத்தியுள்ள விதம் குறித்து விரிவாக பேசுகிறது. ‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வெட்ப மொழிவதாம் சொல்’ என்ற குறளை, தகவலியல் சார்ந்து மிகவும் நுட்பமாக விளக்கியுள்ளார். இது ஓர் உதாரணம் தான்.
இதுபோல், பழந்தமிழ் இலக்கியங்களில் தகவல் சார்ந்தும், அவற்றை வெளிப்படுத்திய விதம் சார்ந்தும் நுட்பமாக அணுகிய விவரிப்புகள் புத்தகத்தில் பரந்து விரிந்துள்ளன. தகவலை பயன்படுத்துவோரை, வியக்க வைக்கும் தகவலை உள்ளடக்கியுள்ளது. செய்தி சொல்பவருக்கு இலக்கணம் வகுக்கும் வகையில் அமைந்த, குறுந்தொகைப் பாடல் ஒன்று:
நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?
ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ இவ்வாறு துவங்கி, தகவலை விரித்து போவது பற்றி மிகவும் நுட்பமாக விளக்குகிறது. புத்தகம் முழுக்க வியத்தகு தகவலும், தகவலை வெளிப்படுத்தும் முறையும் நிறைந்துள்ளன. மிகவும் முக்கியமான துவக்கம்.
அமுதன்