மனமிசைந்த ஒப்புதல் என்ற தலைப்பில் துவங்கி, மீண்டும் தார்ச்சுலா என்ற தலைப்போடு, புத்தகம் 27 அத்தியாயங்களோடு நிறைவடைகிறது. உலகின் புனித நீராடும் புண்ணியத் துறைகளில் மிகச் சிறந்தது ஆதி கைலாசம்; அபாயங்கள் நிறைந்த பகுதி. டில்லியிலிருந்து, 600 கி.மீ., தூரத்திற்கு பயணம் செய்ய வேண்டிய நிலை.
தற்போது பிரபலமாக, அனைவராலும் மேற்கொள்ளப்படும் கைலாச யாத்திரையை விட, ஆதி கைலாச யாத்திரை அபாயகரமானது.
புதுடில்லியிலிருந்து புறப்பட்டு, ஆதி கைலாசத்தில் உள்ள பார்வதி ஏரி வரை பயணித்த தன் பயண அனுபவங்களை, ஒரு நாவல் போல், மிக அழகாக, துள்ளுதமிழ் நடையில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
படிக்க படிக்க சுவாரசியம் அதிகரித்து கொண்டே செல்கிறது. படித்து முடித்தபின், ஆதி கைலாசத்திற்கு சென்று வர வேண்டும் என்ற நினைப்பை தவிர்க்க முடியாது.
குமரய்யா