முனைவர் சித்ரா மாதவன் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள நூலை, புவனாபாலு தமிழாக்கம் செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற, 75 விஷ்ணு ஆலயங்கள் பற்றி விரிவான முறையில் எழுதி உள்ளார். ஒவ்வொரு ஆலயமும், இருக்குமிடம், தலவரலாறு, திருவிழாக்கள்
முதலியவை குறித்து விரிவாகவும், தெளிவாகவும், துல்லியமாகவும் ஆசிரியர் விளக்கி உள்ளார். அவை தலயாத்திரைக்கு மட்டுமின்றி, ஆய்வு முதலானவற்றிற்கும் பெரிதும் உதவும்.
நூலில், வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. தக்க படங்களுடன் அழகாக அச்சிடப்பட்டுள்ளன. விரிவாகவும், தெளிவாகவும் எழுதப்பட்டுள்ள இந்த நூல், வைணவர்களுக்கு மட்டுமின்றி, வரலாற்று ஆர்வலர்களுக்கும் மிகுந்த பயனளிக்கும்.
பேரா.ம.நா.சந்தானகிருஷ்ணன்