சமூக பழக்க வழக்கம், சமய வழிபாடு போன்றவற்றை உன்னிப்பாக கவனித்து, ஆராய்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல். இதில், 14 கட்டுரைகள் உள்ளன. சமயம் தொடர்பாக, எட்டுக் கட்டுரைகளும், சமூகம் தொடர்பாக ஆறு கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
இலங்கையில் தமிழர்களின் வழிபாட்டு இடங்கள், வழிபாடுகள் பற்றி, சண்முகலிங்கனின் கட்டுரைகள் ஆழமாகவும் அழுத்தமாகவும் உள்ளன.
கட்டுரைகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாதது போல் தோன்றினாலும், தீவிர வாசகனால், அவற்றை தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில், தகவல் தளம் உள்ளது. மொழி, வழிபாடு ரீதியாக பிரிந்து நிற்கும் சமூகத்தின் உணர்வெழுச்சியை அமைதிப்படுத்தி, அறிவு தளத்தில் இயங்க வைக்கும் முயற்சியாக இந்த புத்தகத்தை கொள்ளலாம்.
தமிழகமும், இலங்கையும் மானுடவியல் ஆய்வில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இது நல்லிணக்கத்தையும், எளிமையான வாழ்வை உறுதி செய்யும், சிந்தனையின் ஆரம்பமாகவும் அமையும் என்ற நம்பிக்கையை, இந்த புத்தகம் ஏற்படுத்துகிறது.
அமுதன்