பெண்கள் குறித்தும், தமிழர்களது வாழ்வுரிமை, தேசியம், வரலாறு, மாட்சிமை, பெருமை குறித்தும், முந்தைய, இன்றைய வாழ்வியல் நிலை குறித்தான கட்டுரைகளின் தொகுப்பே, இந்த நூல். இதில், ‘தன்மை, முன்னிலை, படர்க்கை’என்ற பிரிவுகளின் கீழ், 32 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பெண் படைப்பாளிகளின் பங்கு குறித்து, முழுவதுமாய் ஆராய்ந்திருக்கிறார், நூலாசிரியரும், மா.பொ.சி., யின் பேத்தியுமான, தி.பரமேசுவரி. கட்டுரைகள் அனைத்தும் கட்டுரையாளரின் சுய கருத்தின் அடிப்படையிலும், வேறு சிலரின் கட்டுரைகளுக்கு மறுப்பாகவும் இணையத்தில் எதிர்வினையாற்றிய வகையிலும் எழுதப்பட்டவை. பெண்கள் தினம், பெண்ணெழுத்து, பெண் படைப்பாளிகள், வரலாற்றிலும் இதிகாசத்திலும் பெண்களின் பங்கு, பெண் மீதான கருத்தியல் தாக்குதல்கள் என, சமகாலச் சூழலை சுட்டிக்காட்டி நீள்கிறது, கட்டுரைகளின் அணிவகுப்பு.
உ.பி., பீகார் மாநிலங்களின் சில கிராமங்களில் இப்போதும் கூட ஒரு வீட்டில், பெண் குழந்தை பிறந்தால், ஒரு மாமரம் நடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் (பக். 192) போன்ற செய்திகள், இன்றைய சூழலில் முன்னெடுத்து செல்ல வேண்டியவை.
ஸ்ரீநிவாஸ் பிரபு