மண்ணும் மக்களுமே, பச்சோந்தி கவிதைகளின் ஆன்மா. நகரமயமாக்கலில் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்ட கிராமங்களையும், மனிதர்களையும் பேசும் இவரது கவிதைகள், எளிமையும், நேர்மையும் நிரம்பியவை. பொருளாதாரத் தேவைக்காக, சென்னையில் அல்லாடும், தெற்கத்தி மாவட்டங்களின் மனிதர்களின் ஆன்மா, பெரும்பாலான கவிதைகளில், பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆவிகள் நடமாடும் கிராமம், லொக்கு லொக்கு மனிதர்கள், கைகுலுக்கும் கண்ணாடி, வாழையடி வாழையாய், தென்னங்கள்ளை போன்ற கவிதைகள் கவனிக்கத் தக்கவை.