‘மெனிஞ்சியோமா’ என்ற மூளையில் முளைத்த வைரஸ் கட்டியினால் பாதிக்கப்பட்டவனின், உள்மன உலகம், இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திடீரென யாருக்காவது வலிப்பு வரும்போது, உதவும் நம்மால், அந்த நேரத்தில் அவர்கள் என்ன உணர்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியுமா? அவர்களது உளவியலை புரிந்து கொள்ள முடியுமா? ஐ.சி.யூ., பிரிவில், அறுவை சிகிச்சைக்கு ஆளாகும் நோயாளியின் பதற்றம் நிறைந்த இரவு எப்படி இருக்கும்? சக நோயாளிகளின் மீதான அவனது பார்வை என்னவாக இருக்கும்? இவைதான் இந்த நாவலின் கருக்களம். இந்த நாவலில், அறிவியலும் நவீன தமிழும் இரண்டறக் கலந்து உள்ளன. கூடவே, வலிப்பு வருகின்றோருக்கு, இரும்பு பொருட்களை தந்தால், வலிப்பு நின்று விடும் என்ற மூடநம்பிக்கையையும், இந்த நாவல் உடைக்கிறது.