எளிய சொற்களின் மூலம், புதுப்புது உலகங்களை அறிமுகப்படுத்துபவை, ராஜா சந்திரசேகரின் கவிதைகள். மழை முடிந்த மாலையில் தெரியும் வானவில் போல், அனுபவங்களை இவரது கவிதைகளில் காணலாம். ‘ஒதுங்கிய போது பழைய நண்பனின் ஞாபகம் வந்தது; பின் நிற்கும் வரை, மழை நண்பனாக இருந்தது’‘நன்றி சொல்லலாம் என கடவுளை பார்க்கப் போனேன். நன்றிக்குள் கடவுள் ஒளிந்திருந்தார்’ போன்ற கவிதைகள் குறிப்பிடத்தக்கன. வாசகனை மிரட்டாத மொழிநடை; இயல்பான சொற்கள்; கவிதைகளில் புதிய தரிசனம். இதுதான் அவரது படைப்புகளின் தன்மை. இலக்கியத்தின் புதிய உலகத்தை அறிய விரும்புவோர், இந்த நூலை தேர்ந்தெடுக்கலாம்.