முகப்பு » கட்டுரைகள் » ஜாதியற்றவளின் குரல்

ஜாதியற்றவளின் குரல்

விலைரூ.250

ஆசிரியர் : ஜெயராணி

வெளியீடு: தலித் முரசு

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பத்திரிகையாளராக பணிபுரியும் ஜெயராணி, மீனா மயில் என்ற பெயரில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. புதிரை வண்ணார்களாக்கப்பட்ட, பூர்வீக வண்ணக் கலைஞர்கள், இந்தியனே வெளியேறு, பொய்யர்கள் ஆளும் பூமி, விடுதலை என்பது, இருக்க விடலாமா ஜாதியை, தேவாலயத்தில் ஜாதி வெறி, கண்டதேவி சூழ்ச்சி, இன்னுமா இந்துவாக இருப்பது போன்ற கட்டுரைகள், வாசகனின் மனசாட்சியோடு உரையாடுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை குறித்து எழுதுவோர், அவர்களின் உள் முரண்பாடுகளை விமர்சிப்பதில்லை என்ற கருத்து உண்டு. அந்த கருத்தை இந்த புத்தகம் உடைக்கிறது. தலித் இலக்கியம், அரசியல் போன்றவற்றை அறிய விரும்புவோரின் பட்டியலில், இந்த புத்தகம் கட்டாயம் இருக்கலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us