காட்சி மொழியை நுட்பமாக கையாண்டு, வெற்றி பெற்ற, மிக முக்கியமான 15 குறும்படங்கள் பற்றிய அறிமுகம் தான் இந்த நூல். தமிழில் வெளிவந்துள்ள, சினிமா பற்றிய அழகியல் பார்வையிலான ஒன்றிரண்டு நூல்களில், இது குறிப்பிடத்தக்கது. இந்த குறும்படங்கள், சமூக நலனுக்காக எடுக்கப்பட்டவை என்பது, நூலாசிரியரின் வாதம். உலகமயமாக்கலை, எதிர்த்து கேள்வி கேட்காத, இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளில், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள் திணிப்பது தான், வெகுஜன ரசனை என்ற பெயரிலான சினிமா மாயை என்கிறார் அவர்.