திரைப்படம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பிற தயாரிப்பு பணிகள், இசை கோர்ப்பு, திரையிடல் என, சினிமாவின் முக்கிய தொழில்நுட்பங்களை விவரிக்கிறது இந்த நூல்.
‘சினிமா உருவாகும் விதம்’ என்ற தலைப்பில், லேப், டெலிசினி, எடிட்டிங், டி.ஐ., டப்பிங், ஆர்.ஆர்., பாசிட்டிவ் ஆகிய தொழில்நுட்பங்கள் பற்றிய அறிமுகங்கள் உள்ளன.
‘டிஜிட்டல் சினிமா’ எனும், தலைப்பின் கீழ், எச்.டி., பிக்சல்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பங்களும், செல்லுலாய்டு கேமரா துவங்கி, ரிக்ஸ் வரை கேமராவின் பல்வேறு பாகங்களின் செயல்பாடுகள், ‘ஒளிப்பதிவு கருவிகள்’ எனும் தலைப்பிலும் விளக்கப்பட்டிருக்கின்றன.