பாரவி எழுதும் பல கதைகள், பரிசோதனை முயற்சிகள். முதல் கதையான, ‘வரப்பு’ – திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் பரிசு பெற்ற கதை. இது, வெள்ளந்தியான கிராமத்து மனிதர்களை அறிமுகம் செய்கிறது. எருமை மாட்டைக் கட்டி இருக்கும் மூக்கணாங்கயிறு இறுகி, ரத்த காயம் உண்டாவதைச் சொல்லி உருகும் கதை, ‘நிறம்’. கண் மருத்துவப் பரிசோதனைக்கு வரும் கிராமத்து மனிதர்களின் அவலங்களைச் சொல்லும், ‘இருட்டு’ – இறுதிச் சடங்கின்போது வாய்க்கரிசி போடுவதைச் சொல்லும், ‘வாய்அரிசி’ முதலியன மிக யதார்த்தமானவை. ‘ஒரு கற்பிதத்தில் இருந்து, நெடும் பயணம்’ போன்ற கதைகள், பரிசோதனை முயற்சிகள். படைப்பு, வாசிப்பில் தான் முழுமை காண முடியும். வாசகத் தேர்ச்சி குறைவு காரணமாக, இதைப் போன்ற பரிசோதனை முயற்சிக் கதைகள் புறக்கணிக்கப்படலாம். ஆனால், ஆழ்ந்து படித்தால் பொருள் விளங்கும்.
– எஸ்.குரு