இந்த நூலில், ஆண் – பெண் உறவு, காதல் என்ற வட்டத்தைச் சுற்றியே பெரும்பான்மையான கதைகள் பின்னப்பட்டு இருக்கின்றன. எல்லா கதைகளுமே, உரையாடல்களின் பலத்தால் நிமிர்ந்து நிற்கின்றன. நெறி தவறும் பெண்ணிடம் கூட, தெய்வீகக் குணங்கள் இருக்கும் என்கிறது, ‘மூன்றாம் கதாநாயகன்’ என்ற கதை. குரு பக்தி இல்லாத சீடனை சித்தரிக்கிறது, ‘குருவை மிஞ்சிய’ என்ற கதை. ‘சிறைப் பறவை’ என்ற கதையில், ஒரு இசை அரசியை நேசிப்பவன்
சொல்கிறான்,‘‘உங்கள் இசையை பொருள் தெரிந்து ரசிக்கக்கூடிய பக்குவமாவது பெற்ற பின், உங்களை வந்து சந்தித்து காதலுக்காக யாசிப்பேன்!’’ நெறி தவறிய கணவனை, அன்பால் ஒரு பெண் வென்று அவனை தனக்கே உரியவனாக்கி கொள்கிறாள். இது, ‘என்ன குறை?’ என்ற கதை. 21 சிறுகதைகள் கொண்ட இந்த தொகுதியில், பல கதைகளில் பெண்களை வர்ணிக்கும் ஆசிரியர், அவர்களை அழகு பதுமைகளாக மட்டும் பார்க்காமல், ஆன்ம சொரூபமாக பார்க்கிறார். சிறந்த படைப்பு.
எஸ்.குரு