கடந்த, 1965ல் வெளியான இந்த நூல், இரண்டாம் பதிப்பாக, தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நூலாசிரியர், மிகுந்த பக்தியுடன், தியாக பிரம்மத்தின் வரலாறு மற்றும் அவரது சீடர், தியாகராஜ வேங்கடரமணரின் வரலாறு ஆகியவற்றை தொகுத்து, இந்த நூலில் கொடுத்துள்ளார்.
தியாக பிரம்மத்தின் சீடர்களில், வாலாஜா பேட்டை வேங்கடரமண சிஷ்ய பரம்பரை, உமையாள்புரம் சிஷ்ய பரம்பரை, தில்லைஸ்தானம் ராமய்யங்கார் சிஷ்ய பரம்பரை ஆகிய மூன்று பரம்பரைகள் குறிப்பிடத்தக்கவை- (பக்.60). தியாகராஜரின் இசை படைப்புகளில், நவுகா சரித்திரம் அற்புதமானது (பக்.81); தியாகராஜர் தம் வாழ்நாளில் செய்த, ஒரே யாத்திரை திருப்பதி யாத்திரை (பக்.88); அய்யம்பேட்டை வேங்கடரமணர்-, வாலாஜாபேட்டை
வேங்கடரமணராக உயர்வு பெற்றது, வேங்கடரமணரின் படைப்புகள் (பக்.108) என, பல சுவாரசியமான தகவல்களும், செய்திகளும் இந்த நூலில் நிரம்பி உள்ளன. இந்த நூலில் சவுராஷ்டிரர்களின் வரலாறும் கொடுக்கப்பட்டுள்ளது.
டாக்டர் கலியன் சம்பத்து