இரண்டே இரண்டு பாத்திரங்கள்; தமிழமுதன் மற்றும் வதனா. தமிழமுதன் வதனாவைக் காதலிக்கிறான். காதல் புலம்பல்களாக மட்டும் இல்லாமல் சமூக சிந்தனைகளும் அந்த காதல் வெளிப்பாடுகள் ஊடே விரவிக்கிடப்பது தான் இந்த நூலின் தனிச்சிறப்பு. ‘பிளாட்பாரவாசிகளின் பிள்ளைகளைப் பார்த்தால், நாட்டின் எதிர்காலம் பயங்கரமாக தெரிகிறது. பாவம்! ஒருநாளைக்கு ஒருவேளை சாப்பாடாவது, அவர்களுக்கு ஒழுங்காகக் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால், பட்டினத்தில் சிற்றுண்டிச் சாலைகளுக்கும், தரமிக்க உணவு விடுதிகளுக்கும், ஸ்டார் ஓட்டல்களுக்கும் பஞ்சமே இல்லை. அங்கு தினந்தோறும் எவ்வளவோ உணவு மிச்சமீதியாகி வீணாகிறது. என்ன அநியாயம்! ஸ்டார் ஓட்டலுக்குச் சென்றால் இருவருக்கே, 2,000 அல்லது 3,000 ரூபாய் செலவாகிறது. இதெல்லாம் என்ன சமூக அமைப்பு?’ (பக்.55) தமிழ் இலக்கியங்களில் இருந்தும், ஆசிரியர் மேற்கோள்கள் காட்டுகிறார்.
– எஸ்.குரு