நாவலாசிரியர் சொல்கிறார்: எய்ட்ஸ் என்ற கொடிய நோய்க்கு உலகில் இதுவரை கண்டுபிடிக்க முடியாத மருந்தை, சித்த மருத்துவத்தில் காண முடியுமா? என்ற கேள்வி வந்தபோது, பெங்களூரில் இருந்து மருத்துவர் ஒருவர், நான் பணியாற்றிய ஆராய்ச்சி நிறுவனமாகிய கிங் நிலையத்திற்கு வந்தார்.
அவர் இந்த எய்ட்ஸ் நோய்க்கு, மருந்து கண்டுபிடித்துள்ளதாக சொன்னார். அதன் அடிப்படையில், நமது இந்திய மருத்துவம் எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதை உலகமும், பாரத நாடும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு நாவலாக எழுத எண்ணியே இந்த புதினத்தை எழுதியுள்ளேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
நாவலின் முக்கியப் பாத்திரங்களான விக்ரம் மற்றும் நந்தினி, எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகின்றனர். குன்றத்தூரைச் சார்ந்த ஜோதிடரிடமிருந்து சேகரிக்கப்பட்ட சித்த மருத்துவ ஏட்டு சுவடிகளை ஆய்வு செய்து, எய்ட்ஸ் நோய்க்கான மருந்து, ‘கல்பா 90’யை கண்டுபிடிக்கிறார் டாக்டர் சங்கர். விக்ரம் – நந்தினி, டாக்டர் சங்கர் மருந்தை சாப்பிட்டு குணமடைந்து, திருமணம் செய்து கொள்கின்றனர். இன்பியல் முடிவு. நல்ல நாவல்.
எஸ்.குரு